முகத்திற்கு அழகு தருவதில் எமது ஒவ்வொரு அங்கங்களும் அழகைக் கொடுக்கின்றன. கண், காது, மூக்கு, வாய், உதடு, முடி, பற்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகைக் கொடுக்கின்றன.
இவற்றில் முகத்திற்கு அழகைத் தருவதில் உதட்டிற்கும் பெரும்பங்கு உண்டு. அதற்காக அனைவருமே நமது உதடுகள் நன்கு மென்மையாக, அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
உதட்டிற்கு பொருத்தமில்லாத உதட்டுச் சாயம் மற்றும் தரமில்லாத உதட்டுச்சாயத்தை பயன்படுத்துவதன் மூலம் உதட்டை கருமையடைய வழிவகுக்கின்றது.
ஆகவே உதட்டை மென்மையாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள். இவற்றை செய்து பார்ப்பதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
தினமும் காலையில் பற்களை துலக்கியப் பின், சிறிது பேக்கிங் பவுடரை, உதட்டின் மீது, மென்மையாக தேய்த்து வந்தால், உதடுகள் வறட்சியடையாமல், மென்மையாக இருக்கும்.
உதட்டில் சிறிது தேன் அல்லது ஆமணக்கெண்ணெயை தேய்த்து வந்தால், உதடுகள் எப்போதும் ஈரப்பசையுடன் காணப்படும்.
உதடுகள் பிங்க் நிறத்தில் வேண்டுமென்றால், ரோஜா இதழ்களை, பால் கிரீமுடன் கலந்து தடவினால், உதடுகளுக்கு எப்போதும் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
பாதாம் பருப்பை நன்கு அரைத்து அதனை உதட்டிற்கு தடவி வந்தாலும் உதடுகள் மென்மையடையும்.
முக்கியமாக தினமும் 8-10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் குறைவாக இருப்பதால் தான் உதடுகள் வறட்சியை அடைகின்றன.
மேலும் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நன்கு உண்ண வேண்டும் இவற்றின் மூலம் அழகான உதட்டினைப் பெறலாம்.
No comments:
Post a Comment