Friday 19 October 2012

ஏலக்காய்


ஏலக்காய்


சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மருத்துவ குணங்கள்

  • ஏலக்காய் ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.
  • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.
  • ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.
  •  இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.
  • ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.
  • மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம்.

J.ELANGOVAN.TRICHY