Thursday, 24 May 2012

மரவள்ளிக் கிழங்கு வடை


தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு 
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.

1.ஜவ்வரிசி வடாம்



தேவையான பொருட்கள்ஜவ்வரிசி - 1 கிலோபச்சை மிளகாய் - 10எலுமிச்சம் பழம் - 3உப்பு - தேவையான அளவு


செய்முறை :


பச்சை மிளகாயுடன் உப்பைச் சேர்த்து நைசாக அரைத்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வைக்கவும். ஜவ்வரிசியை அளந்து அதன் அளவைப் போல் இரண்டரை பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து ஜவ்வரிசியைப் போட்டு வேக வைத்து ஆற வைத்து மிளகாய் கலவையைக் கிளறவும். சிறிய கரண்டியால் (பிளாஸ்டிக் ஷீட் அல்லது துணியில் மாவை விட்டு சமமாகவும் வட்டமாகவும் பரப்பிக் காயவைத்து கூழ் வடாம் எடுப்பது போல் எடுத்து வைக்கவும். ஜவ்வரிசியை கொஞ்சம் கெட்டியாக கிளறி ஆறியதும் உப்பு, எலுமிச்சம்பழம், பச்சைமிளகாய் கலவையைப் போட்டுக் கலந்து தண்ணீரைக் கையில் தொட்டுக்கொண்டு ஜவ்வரிசியை கையில் எடுத்து ஷீட்டில் வட்டமாகவும் மெல்லியதாகவும் தட்டலாம். பொரிக்கும்போது முத்துப்போல் பொரியும். பக்குவம் கெட்டியாக இருக்கவேண்டும்.

J.ELANGOVAN.TRICHY