J.ELANGOVAN.TRICHY
....

Wednesday, 24 September 2014

கிராம்பு மகிமை

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. 

உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது, 

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது, தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்கடிக்க வல்லது, சோர்வை போக்கி புத்துணர்வை தூண்டக் கூடியது இலவங்க தைலம் வலிகுறைப்பானாக மேற்பூச்சாக பயன் படுத்தக்கூடியது. 

வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக பயன்படுகிறது. "யூஜினால்'' என்னும் இலவங்க தைலத்தில் உள்ள முக்கிய வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. 

இலவங்கத்தின் மொத்தப் பகுதியிலும் ஒரு நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவை ஈரலுக்கு எதிராகச் செயல்பட்டு அதைக் கெடுக்கக் கூடியதாகவும் எலும்பு மஜ்ஜையைப் பாதித்து ரத்த உற்பத்தியைத் தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்'' என்னும் இரும்புச் சத்துக்குறைப்பாட்டை ஏற்படுத்தி ரத்த சோகையை உண்டாக்கக் கூடியவையாக உள்ளன. 

இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படா வண்ணம் இலவங்கம் புற்று நோய்க்கென "கீமோ தெரபி'' சிகிச்சை மேற்கொள்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. 

இலவங்கத்தில் பொதிந்துள்ள சத்துக்கள் :

பொதுவாக 100 கிராம் இலவங்கத்தில் பின்வரும் ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. உயிர்ச்சத்து 47ரி கலோரி, கார்போ ஹைட்ரேட் 10.51கிராம், புரதச் சத்து 3.27 கிராம், கொழுப்புச் சத்து 0.15 கிராம், நார்ச்சத்து 5.4 கிராம், விட்டமின் சத்துக்களான ஃபோலேட்ஸ் 68 மைக்ரோ.கி. நியாசின் 1.05 மி.கி., பேண்டோதெனிக் அமிலம் 0.33 மி.கி., விட்டமின் `சி' 11.7 மி.கி., விட்டமின் `ஈ' 0.19 மி.கி., விட்டமின் ரி. 14.8 மை.கி. மற்றுமி சிறிதளவு ரிபோஃப்ளேவின் மற்றும் தயாமின் ஆகியனவும் அடங்கியுள்ளன. 

மேலும், நீர்ச்சத்துக்களான சோடியம் என்னும் உப்புச் சத்து 94 மி.கி. அளவும் பொட்டாசியம் உப்பு 370 மி.கிராம் அளவும் உள்ளன. தாது உப்புக்களான கால்சியம் 44 மி.கி., காப்பர் 0.23 மி.கி., இரும்பு 1.28 மி.கி., மெக்னீஷியம் 60 மி.கி., மாங்கனீஸ் 0.256 மி.கி., பாஸ்பரஸ் 90 மி.கி., செலினியம் 7.2 மை.கி., துத்தநாகம் 2.32 மி.கி. ஆகியவற்றோடு கரோட்டீன், லூடின்சியா சாந்தின் ஆகிய சத்துக்களும் பொதித்துள்ளன. 

இலவங்கத்தின் அடங்கியுள்ள "யூஜினால்'' என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். வழிவழியாக வரும் பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது. 

இலவங்கத் தைலத்தை வலியுள்ள இடத்தில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது பூசிய இடத்தில் சற்று எரிச்சலை உண்டாக்கி ரத்த நாளங்களை விரிவடையச் செய்து அதன்மூலம் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி தோல் பகுதியை சற்று வெம்மைப் படுத்துகிறது. 

இதனால் மூட்டுவலி, தசைப்பிடிப்பு கண்டபோது பெரும் நிவாரணம் கிடைக்கிறது. இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரைஈரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. 

இலவங்கம் ரத்தத்தில் ஏற்படும் வட்டணுக் குறைவை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் இதயமும் இதய நாளங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது. இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. 

தொடர்ந்து அதன் மணம் 4 முதல் 5 மணிநேரம் வரை கொசுக்களை விரட்டும் வல்லமை வாய்ந்தது. இலவங்கம் மூளையைப் பாதிக்கக் கூடியவையான பரபரப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பைத் தரவல்லது. 

இலவங்கத் தைலத்தோடு சிறிது உப்புசேர்த்து தலைவலி கண்டபோது நெற்றிப் பொட்டின் மீது பற்றிடுவதால் ஒருவித குளிர்ச்சியை உண்டாக்கி தலைவலியை உடனடியாக விரட்டுகிறது.
Loading...

Followers

J.ELANGOVAN.TRICHY