Tuesday 29 April 2014

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!


  ஆவி பிடித்தல்
            முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ,அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

Tuesday 22 April 2014

எச்சரிக்கை -சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?



எச்சரிக்கை  -சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?


சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்.

சி. எஃப். எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த பொடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்.

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள். முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும்!

Monday 14 April 2014

Friday 4 April 2014

*SHORTCUT MATHS* SHRI SAIRAM ACADEMY*IBPS COACHING CENTER*: INVITATION (SHRI SAIRAM ACADEMY)அனைவரும் வருகை ப...

INVITATION (SHRI SAIRAM ACADEMY)



அனைவரும் வருகை புரியுங்கள்



வருகின்ற



06/04/2014 அன்று முதல்

SHRI SAIRAM ACADEMY

NO :24,ஓம் சக்தி காம்ப்ளெக்ஸ் ,

மூன்றாவது தளம் ,

பழைய கரூர் சாலை,

(அண்ணாசாலை அருகில் )

மேலசிந்தாமணி ,

திருச்சி.620002

என்ற முகவரியில் சிறப்பாக நடைபெற

நண்பர்களாகிய உங்கள் அனைவரையும் வருக வருக 

என இரு கரம் கூப்பி அழைக்கிறோம் .

நன்றி.



Wednesday 2 April 2014

பாட்டி சொன்ன சமையல்


                        பாட்டி சொன்ன சமையல் 

நிதிஷ் குமார் &ரக்ஷீதப்ரியா வழங்கும் .....

"என்னுடைய அப்பாவின் அப்பாவின் அம்மா எங்களுக்காக சொல்லிச் சென்ற அற்புதமான சமையல் குறிப்பு. 
இன்றுஎங்கள்பாட்டிமறைந்தாலும் 
அவரது சமையல் குறிப்பு உலகம் முழுதும் எதிரொலிக்கட்டும்".

இதற்கு உதவிய கூகிள் நிறுவனத்திற்கு எங்கள் குடும்பத்தினரின் நன்றிகள் 

                           
J.ELANGOVAN.TRICHY