Friday, 15 August 2014

பனீர்_கோலாபுரி:

பனீர்_கோலாபுரி:

தேவையானவை:

பனீர் க்யூப்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2 (விழுதாக அரைக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கொப்பரைத் துண்டுகள் - 4 டீஸ்பூன், மிளகு - 5, சோம்பு - அரை டீஸ்பூன், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, கிராம்பு - 2, முந்திரிப் பருப்பு - 4, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் (தேவைபட்டால்) - சிறிதளவு, தனியா - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெறும் கடாயில் வெள்ளை எள், கொப்பரை, சோம்பு, மிளகு, தனியா, ஏலக்காய், கிராம்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த மசாலா மற்றும் அரைத்த தக்காளியை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும். பிறகு, மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து, பனீர் துண்டுகளையும் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால்) கரம்மசாலாத்தூள் சேர்த்து, 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Photo: #பனீர்_கோலாபுரி:

பப்பட்_சப்ஜி:

பப்பட்_சப்ஜி:

தேவையானவை:

மிளகு அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு, கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சி
றிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக் கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்
.

Photo: #பப்பட்_சப்ஜி:

தேவையானவை: 

 மிளகு அப்பளம் - 2, தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு, சீரகம் - சிறிதளவு,  கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்    சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக் கவும். கொத்தமல்லி தூவி பரிமாற வும்.

வெள்ளரிக்காய்_மசாலா:

வெள்ளரிக்காய்_மசாலா:

தேவையானவை:

வெள்ளரிக்காய் - ஒன்று, சின்ன வெங்காயம் - 5, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 3 பல், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெள்ளரிக்காயைத் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பட்டை சேர்த்து நன்கு வதக்கி, விழுதாக அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் விட்டு... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த விழுதை சேர்த்து மேலும் வதக்கி, நறுக்கிய வெள்ளரிக்காயைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Photo: #வெள்ளரிக்காய்_மசாலா:

பேபி_கார்ன்_மசாலா:

பேபி_கார்ன்_மசாலா:

தேவையானவை:

பேபி கார்ன் - 15, வெங்காயம் - 2, குடமிளகாய் - ஒன்று, தக்காளி - 2 (பெரியது), முந்திரிப் பருப்பு - 5, மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கஸ¨ரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, மற்றும் பாதி குடமிளகாயை எண்ணெயில் வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத் தூள், கஸ¨ரி மேத்தி, தக்காளி சாஸ், கரம்மசாலாத்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பால் சேர்த்து, வெந்த பேபி கார்னை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள பாதி குடமிளகாயை துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
Photo: #பேபி_கார்ன்_மசாலா:

சோலே மசாலா

  1. சோலே_மசாலா:

    தேவையானவை:

    வெள்ளைக் கொண்டைக்கடலை - அரை கப், டீ பேக் ஒன்று, ஏலக்காய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், உலர்ந்த மாதுளை விதைப் பொடி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஏலக்காய் - ஒன்று, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, டீ பேக் மற்றும் ஏலக்காய் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும். டீ பேக் மற்றும் ஏலக்காயை தூக்கி போட்டுவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி... உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளியை அரைத்து சேர்த்து, உலர்ந்த மாதுளை பொடியை சேர்க்கவும். பிறகு, வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
    Photo: #சோலே_மசாலா:

J.ELANGOVAN.TRICHY