Wednesday 24 September 2014

கிராம்பு மகிமை

இலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது. கிராம்பு எனப்படும் இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது. 

உள் உறுப்புக்களைத் தூண்டக் கூடியது, வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது, வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கூடியது, 

வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது, தொற்று நோய்க் கிருமிகளைத் தோற்கடிக்க வல்லது, சோர்வை போக்கி புத்துணர்வை தூண்டக் கூடியது இலவங்க தைலம் வலிகுறைப்பானாக மேற்பூச்சாக பயன் படுத்தக்கூடியது. 

வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம் பயன்படுகிறது. பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக பயன்படுகிறது. "யூஜினால்'' என்னும் இலவங்க தைலத்தில் உள்ள முக்கிய வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. 

இலவங்கத்தின் மொத்தப் பகுதியிலும் ஒரு நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 

இவை ஈரலுக்கு எதிராகச் செயல்பட்டு அதைக் கெடுக்கக் கூடியதாகவும் எலும்பு மஜ்ஜையைப் பாதித்து ரத்த உற்பத்தியைத் தடுப்பதோடு ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்'' என்னும் இரும்புச் சத்துக்குறைப்பாட்டை ஏற்படுத்தி ரத்த சோகையை உண்டாக்கக் கூடியவையாக உள்ளன. 

இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படா வண்ணம் இலவங்கம் புற்று நோய்க்கென "கீமோ தெரபி'' சிகிச்சை மேற்கொள்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது. 

இலவங்கத்தில் பொதிந்துள்ள சத்துக்கள் :

பொதுவாக 100 கிராம் இலவங்கத்தில் பின்வரும் ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. உயிர்ச்சத்து 47ரி கலோரி, கார்போ ஹைட்ரேட் 10.51கிராம், புரதச் சத்து 3.27 கிராம், கொழுப்புச் சத்து 0.15 கிராம், நார்ச்சத்து 5.4 கிராம், விட்டமின் சத்துக்களான ஃபோலேட்ஸ் 68 மைக்ரோ.கி. நியாசின் 1.05 மி.கி., பேண்டோதெனிக் அமிலம் 0.33 மி.கி., விட்டமின் `சி' 11.7 மி.கி., விட்டமின் `ஈ' 0.19 மி.கி., விட்டமின் ரி. 14.8 மை.கி. மற்றுமி சிறிதளவு ரிபோஃப்ளேவின் மற்றும் தயாமின் ஆகியனவும் அடங்கியுள்ளன. 

மேலும், நீர்ச்சத்துக்களான சோடியம் என்னும் உப்புச் சத்து 94 மி.கி. அளவும் பொட்டாசியம் உப்பு 370 மி.கிராம் அளவும் உள்ளன. தாது உப்புக்களான கால்சியம் 44 மி.கி., காப்பர் 0.23 மி.கி., இரும்பு 1.28 மி.கி., மெக்னீஷியம் 60 மி.கி., மாங்கனீஸ் 0.256 மி.கி., பாஸ்பரஸ் 90 மி.கி., செலினியம் 7.2 மை.கி., துத்தநாகம் 2.32 மி.கி. ஆகியவற்றோடு கரோட்டீன், லூடின்சியா சாந்தின் ஆகிய சத்துக்களும் பொதித்துள்ளன. 

இலவங்கத்தின் அடங்கியுள்ள "யூஜினால்'' என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். வழிவழியாக வரும் பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால் செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது. 

இலவங்கத் தைலத்தை வலியுள்ள இடத்தில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது பூசிய இடத்தில் சற்று எரிச்சலை உண்டாக்கி ரத்த நாளங்களை விரிவடையச் செய்து அதன்மூலம் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி தோல் பகுதியை சற்று வெம்மைப் படுத்துகிறது. 

இதனால் மூட்டுவலி, தசைப்பிடிப்பு கண்டபோது பெரும் நிவாரணம் கிடைக்கிறது. இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரைஈரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. 

இலவங்கம் ரத்தத்தில் ஏற்படும் வட்டணுக் குறைவை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் இதயமும் இதய நாளங்களும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது. இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது. 

தொடர்ந்து அதன் மணம் 4 முதல் 5 மணிநேரம் வரை கொசுக்களை விரட்டும் வல்லமை வாய்ந்தது. இலவங்கம் மூளையைப் பாதிக்கக் கூடியவையான பரபரப்பு, ஞாபக மறதி, மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கக் கூடியது. மூளைக்கு சுறுசுறுப்பைத் தரவல்லது. 

இலவங்கத் தைலத்தோடு சிறிது உப்புசேர்த்து தலைவலி கண்டபோது நெற்றிப் பொட்டின் மீது பற்றிடுவதால் ஒருவித குளிர்ச்சியை உண்டாக்கி தலைவலியை உடனடியாக விரட்டுகிறது.

Saturday 13 September 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க


வெறும் நூறு ரூபாயில் (Rs.100)
புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த
நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் ,
சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை ,
வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த
புற்று நோய்க்கு உண்டு.
இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில
மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த
நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள்
மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில்
மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும்
செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின்
வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில்
பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய
Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக
கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும்
பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள
முட்களை நீக்கி கொள்ள
வேண்டும்.தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக்
கொள்ளவேண்டும் அடுத்த படியாக
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில்
கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன்
சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்.
இம்மருந்தை தினமும்மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம்
உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்
போதும் மருந்தை நன்றாக குலுக்கிக்
கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால்
பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும்.
மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும்
தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய
கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய்
நன்கு குணமாகும்
வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .
சிலருக்கு மிக
குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான
சக்தி மிகுந்த மருந்து ஆகும் .
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத
பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில்
இதை தெரியப்படுத்துங்கள்.
யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக
இருக்க கூடும்… !
சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக ,
புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள
ஆரம்பித்தல் நல்லது.
ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய்
வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க..
கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான
அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப்
போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை ,
இதுக்கு மேலே தொடுவீங்க !?
-R P KARTHIK

Friday 12 September 2014

எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .

நெஞ்சார்ந்த நன்றி
அன்புள்ள நண்பர்களே ,
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற 
அருள்மிகு ஸ்ரீ உக்கிரமாகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக
திருவிழாவை முன்னிட்டு எத்தனையோ மக்கள் நன்கொடை அளித்து இருந்தபோதும் என்மகள் ரக்ஷீத பிரியா தன்னுடைய சிறு பங்காக சிறு தொகையினை நன்கொடை அளித்தமைக்கு கிராம பொதுகுழு தெய்வீக மகாசபை சார்பில் கோயில் மதில் சுவரில் அமைக்கப்பெற்ற கல்வெட்டில் என்மகளின் பெயரை பதிய வைத்து இந்த உலகில் நீங்கா புகழுடன் நீடுடி பெயருடன் வாழ வைத்த அனைத்து பொதுகுழு உறுப்பினர்களுக்கும்   எங்கள் குடும்பத்தாரின் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் அன்புடன் தெரிவிக்கிறோம் .
நன்றி நன்றி .

இப்படிக்கு .
ஜெ.இளங்கோவன் குடும்பத்தார் 
மு.ஜம்புலிங்கம் (லேட்) எல்லா புகழும் என் தந்தைக்கே சேரும் .




























Thursday 11 September 2014

இளமையா இருக்க ஆசையா?


Baskar Jayaraman added 2 new photos.
குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’

இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த 

மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை 


மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த 

செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் 

செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் 

இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி 

மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். 

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் 

முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி 

மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை 

முகத்தில் 

தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் 

ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் 

எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு 

தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.



என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!


சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ்

மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம்



வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி 
உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான 
மருத்துவக்குணங் களை கொண்டது.


தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற

நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற

அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத்

தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்

காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற

வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.



சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு 
வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய 
அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை 
தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.


வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய்

எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில்

புண்ஆறும்.



கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் 
பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் 
இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் 
கட்டும் மாறும்.


இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி

அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக

பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில்

இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல

மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிறது

Tuesday 9 September 2014

ஓவியப் போட்டி பாராட்டு விழா


                                                 திருச்சி தில்லைநகரில் உள்ள LIC  நிறுவனம் நடத்திய 
     
ஓவியப் போட்டியில் என்மகள் ரக்ஷீத ப்ரியா வெற்றி பெற்றதற்கு நடைபெற்ற

 பரிசளிப்பு விழா .

  நாள் :08-09-2014














































J.ELANGOVAN.TRICHY