Saturday, 19 May 2012

மாங்காய் இனிப்பு தொக்கு


தேவையான பொருட்கள்

கிளிமூக்கு மாங்காய் - 1 பெரியது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
வெல்லம் (துருவியது) - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை

1. மாங்காயை தோல் சீவி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.



3. பிறகு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, உடன் வெட்டி வைத்துள்ள மாங்காயைப் போட்டு கிளறி, 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

4. மாங்காய் நன்றாக வெந்ததும், துருவிய வெல்லத்தைப் போட்டு நன்றாகக் கிளறி, சுமார் ஐந்து நிமிடம் வரை சிறுதணலில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையோடு இந்த தொக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

2. இந்த தொக்கு குழைவாக வெந்து இருந்தால் சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

3. தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் போன்ற சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

4. தொக்கு செய்யும் போது, அடுப்பை சிறு தணலில் மட்டுமே வேகவிடவும்.

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் - 2
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 10
சோள மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு






செய்முறை

1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.

3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
J.ELANGOVAN.TRICHY