J.ELANGOVAN.TRICHY
....

Friday, 20 April 2012

கருவேப்பிலை இது ஒரு சத்து நிறைந்த கீரையாகும். இதில் 63 சதம் நீரும், 6.1 சதவீதம் புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்த கீரை 108 கலோரி சக்தியை கொடுக்கிறது. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம். மணிச்சத்து, இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் முதலியன சத்தும் இந்த தழையில் உண்டு.உயிர்சத்து மிகுதியாக உள்ள இந்த கீரையில் வைட்டமின் A 12.600 அனைத்துவகை அலகு கொண்டதாகும். உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்த த்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. இந்த கீரை மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கவல்லது.கறிவேப்பிலை வேம்பு இலைப் போன்ற தோற்றமளிக்கும். ஆனால் கறி வேப்பிலை வேப்பம் இலையைப் போக் பச்சையாக இல்லாமல் சற்று கரும்பச்சை நிறமாக இருக்கும். மரத்தின் பட்டையும் சிறிது சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இதனைக் கறுவேம்பு என்பர். இதை ஒட்டியே வடமொழியில் ‘காலசாகம்’ என்ற பெயர் கருவேப்பிலைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைக் கால்க்ஸ் என்றால் செம்பு என்னும் பொருள்படக்கூடியது. இந்த மரம் செம்புநிறச் சாயல் உள்ள காரணத்தினால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு, அவை நாட்டுக்கறிவேப்பிலை,  ட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும்நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.பூக்கள் கொத்தாக அமைந்திருக்கம், கறிவேப்பிலைப் பழம் உருண்டை வடிவாக கொண்டது. இந்த பழம் சதைப்பற்றாக இருக்கும். காய் பழுத்து சிவப்பாகி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். கறிவேப்பிலையின் இலை, ஈர்க்கு,பட்டை, வேர் முதலியன உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.கருவேப்பிலை சாப்பிட்டால் கண் பார்வைக்கோளாறு உங்களை அணுகாது. எலும்புகள் பலப்படும் சோகை நோய் வரப்பயப்படும்.  புண்கள் விரைவில் ஆற கருவேப்பிலை உதவுகிறது. வாய்ப்புண் உள்ளவர்கள் கருவேப்பிலை சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறிவிடும்.  வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளைப்போக்கும் குணம் கருவேப்பிலைக்குண்டு. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரணசக்தியைக்கூட்டும், பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தைக்கட்டுப்படுத்தி வாந்தி யைத்தடுத்து வயிற்றில் ஏற்படும் வயிற்று இரச்சலைத்தடுக்கும்

நன்னாரி வேர்


இதன் வகை பலவகை உண்டு - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.
இது  இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம்  கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும்.

சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தை தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. 

முக்கியமாக மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
இதுவரை சரிவர பயன்படுத்தப்பாடதது .இதன் வேரை தொடர்ந்து பயன் படுத்தினால் எயிட்ஸ் என்னும் கொடிய நோயில் இருந்து தப்பலாம்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து கால் லிட்டர் . பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, , மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள்  தொடர்ந்து சாப்பிட  நரை மாறும்.

பச்சைவேரை சிறிது இடித்து   நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வரப் , , நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும்.    ஆனால் பத்தியம்  மிக அவசியம்.

ஆண்மை பெருக நன்னாரி வேர் ஊறிய நீரை  இளஞ்  சூடாக அருந்தி வரவேண்டும். . இது ஒரு இயற்க்கை  தரும் டானிக் உடல் தேற்றி ! கண்டவற்றை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட நன்னாரி வேர் நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும்  நிற்கும்.

பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும்,இதுவே மாவலி அல்லது மாகாளி  ஊறுகாய் எனப்படும். சித்தமருத்துவத்தில் நன்னாரி  லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.
மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்
கோடைக்காலம் வந்து விட்டால் நா வரச்சியை  தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது  .இது உடலின் உள் வெப்பத்தை தணிப்பது .ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை பருகினால் உடலுக்கும் மனதிற்கும் குளுகுளு .


கிராம்பு மகிமை


பல் வலி, தேள்கடி, விஷக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.
வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும்.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும்.
இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.
வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.
உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.
பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
 இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
 சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.  கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.  3 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.  கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி.
வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
 கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும். ரசனையுள்ள தஞ்சைகாரர்கள் வெற்றிலையுடன் கிராம்பையும் சேர்த்து போட்டுக்கொள்வார்கள் .
பாடகர்களுக்கும் தொண்டை கரகரப்பை நீக்கும் உடனடி நிவாரணி கிராம்பு .
பெயரிலேயேத் தெரியும் இது ஒரு பூ கிராம் பூ !
ஆனால் தலையில் வைக்க முடியாத தலை சிறந்த பூ !

துத்திக் கீரை


கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.
குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.
இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்
சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை
எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்
இப்படியிற் றுத்தி யிலையை
(அகத்தியர் குணபாடம்)
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
மூல வியாதி குணமாக
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.
உடல் சூடு தணிய
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
வெப்பக்கட்டி குணமாக
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
பல்ஈறு நோய் குணமாக
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
குடல் புண் ஆற
துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
சிறுநீர் பெருக்கி
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
  

கீழாநெல்லிக் கீரை


நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.  
கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.  
இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.  
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.  
கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.  
தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும்.  
இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.  
சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.  
மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.  
கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.  

ஆரைக் கீரை


நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.
குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.
இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.
இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும். இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெந்தயக் கீரை


சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.   
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.   
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.   
வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.  

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும். 

இயற்கை அழகு

மணம் தரும் கோரைக் கிழங்கு!

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா? என்று இறைவனுக்கே சந்தேகம் வந்ததற்கு காரணம் அந்தக் காலப் பெண்கள் கோரைக்கிழங்கு மாவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்ததுதானோ என்னவோ... கோரைக் கிழங்கு மாவை தலையிலும், உடலிலும் தேய்த்துக் குளித்து வந்தால் நீங்கள் இருக்கும் இடம் மணமணக்கும் போங்கள். தவிர இந்தக் கிழங்கில் உள்ள `டெர்பீன்கள்' சேர்த்து தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் காய்ச்சலையும் போக்கக்கூடியது. 

தினம் ஒரு நெல்லி!


தோல் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ, நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வாருங்கள் போதும்.

``அழகாக இருக்க விரும்பாத பெண்களே கிடையாது. அப்படிப்பட்ட அழகை எந்த சைடு எஃபெக்ட்டும் இல்லாமல், செலவும் அதிகம் ஆகாமல் பெற முடியும்'' என்கிறார் அழகுக் கலை பயின்ற முதல் பெண் சித்த மருத்துவரான டாக்டர் கே. ராமலட்சுமி.

சருமத்தில் தோழி!


சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, சொறி, சிரங்கு போன்ற எல்லா வகை சரும பிரச்னைகளுக்கும் பெஸ்ட் தோழி பறங்கிப்பட்டைதான்!

சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பறங்கிப்பட்டை சூரணத்தை 40 நாட்கள் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன சரும பிரச்னைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விடும். சருமத்திலும் நல்ல நிறம் கொடுக்க ஆரம்பிக்கும்.

முடி செழித்து வளர...


பெயரிலேயே தன் குணத்தை சொல்லும் `பொடுதலை' தான் நல்ல முடி வளர்ச்சிக்கு ஏற்ற மூலிகை. பொடுதலையின் இலைச்சாறுடன் தேங்காயெண்ணெய் கலந்து காய்ச்சவும். இதை பொடுகு உள்ளவர்கள் தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கி தலைமுடி செழித்து வளரும். தவிர பெரும்பாலும் முக அழகும், முதுகு அழகும் கெட்டுப் போவதே பொடுகினால்தானே... ஸோ, பொடுதலையை பயன்படுத்தி கூந்தலை வாருங்கள். கூடவே முகத்தையும், முதுகையும் பொடுகு பாதிப்பில்லாமல் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

அழகுராணி சோற்றுக் கற்றாழை!


சித்தர்களால் `குமரி' என்று செல்லமாக அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை உண்மையிலேயே கடவுள் பெண்களுக்குக் கொடுத்த ஒரு அழகு வரம் என்றே சொல்லலாம்... ஃபிரெஷ்ஷான கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

ஆஹோ ஓஹோ பச்சிலை!

ஒரு இலையை கசக்கினாலே வீடு முழுவதும் மணம் வீசும் திருநீற்றுப் பச்சிலையிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணெயை (Bascillicum oil) தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதைக் கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாமே மறைந்துவிடும்.

செலவேயில்லாமல் ஸ்லிம்மாக்கும் அருகம்புல்!


சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இடித்து சாறு பிழிந்து அதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலிலுள்ள நச்சு மற்றும் கெட்ட நீர் வெளியேறி விடும். ரத்தம் சுத்தமாகும். உடம்பிலுள்ள தேவையற்ற ஊளைச்சதையெல்லாம் குறைய ஆரம்பிக்கும். 

தேங்காய் எண்ணெயையும், அறுகம்புல் சாற்றையும் சமஅளவு எடுத்து தைலமாக காய்ச்சி அதை உடலெங்கும் பூசி அரைமணி நேரம் கழித்து பயற்றம் பருப்பு மாவால் தேய்த்துக் குளியுங்கள். இப்படியே தொடர்ந்து செய்து வர உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அறுகம்புல் சாற்றில்சிறிதளவு மஞ்சள் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பித்த வெடிப்புகளில் தடவி வர பாதங்கள் பஞ்சு போல் `மெத்'தாகி விடும்.

முள்ளங்கி

இது குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது.

இதில் 3 வகைகள் உள்ளன. அவை

1. வெள்ளை முள்ளங்கி

2. சிவப்பு முள்ளங்கி

3. மஞ்சள் முள்ளங்கி

ஆகியவைகள் ஆகும்.

முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன.

இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது.

இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும்.

வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும், மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

தலைவலி, வயிற்றுவலி, வயிற்றில் எரிச்சல், சுவாசக் கஷ்டம் போன்ற தொல்லை நீங்கும். பற்கள் உறுதிப்படும் பற்கள் சம்பந்தமான நோய்கைளயும் குணப்படுத்த வல்லது. சிறுநீரக உறுப்புகளுக்கு வலுவைத் தரும். சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.

வெள்ளை முள்ளங்கியைப் போலச் சிவப்பு முள்ளங்கியும் மருத்துவக் குணம் உள்ளது. இது நரம்புத் தளர்ச்சியைப் போக்க வல்லது. குடலுக்கு வலிமை தருகிறது. உடலுக்கும் உறுதியை அளிக்க வல்லது.

வெள்ளை முள்ளங்கியில் உள்ளது போன்ற காரத் தன்மை இதில் இருக்காது.

மஞ்சள் முள்ளங்கியைக் கேரட் என்று சொல்லுவார்கள். இதைப் பச்சையாக அப்படியே சாப்பிட்டால் கண் தொடர்பான நோய்கள் குணமாகும். உடலுக்குக் குளிர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும். இதைப் பற்களால் கடித்து நன்றாக அரைத்துச் சாப்பிடுவதால் பற்களில் ஏற்படும் எல்லா விதத் தொல்லைகளையும் நீக்க வல்லது. சீரண சக்தியை அதிகமாக்கும். கருவுள்ள தாய்மார்கள் அடிக்கடிச் சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் எலும்புகள் வலிமை பெரும்.

சேப்பங்கிழங்கு

இது செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பாக இருக்கும். இதில் நான்கு வகைகள் இருந்தாலும் கிழங்கின் நிறத்திலோ, ருசியிலோ, குணத்திலோ வேறுபாடு இருப்பதில்லை.

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ, பி ஆகிய உயிர்ச்சத்து சிறிதளவும் இருக்கின்றன.

இருந்தாலும் இக்கிழங்கு கோழையை அதிகரிக்க வல்லது. இதை அதிகமாகவோ, அடிக்கடியோ சாப்பிடுபவர்களுக்குத் தொண்டையில் கோழை கட்டும்; இருமல் வரும்.

ஆகவே இக்கிழங்குடன் புளி சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், இஞ்சி, வெள்ளைப் பூண்டைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலும், கெடுதல்கள் குறையும்.

மலச்சிக்கலை நீக்க வல்லது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. சில ஆண்டுகளுக்கு பலவீனம் காரணமாகவோ, வயோதிகத்தினாலோ ஆண் தன்மைக் குறைவு ஏற்படும். அத்தகையவர்கள் இந்தக் கிழங்கைச் சாப்பிட்டு வந்தால் ஆண் தன்மைக் குறைவைப் போக்குவதோடு, இந்திரியத்தையும் கெட்டிப்படுத்தும்.

இதை அப்படியே அரைத்து, கட்டிகளுக்கும், புண்களின் மேலும் பற்றாகப் போட்டால் குணமாகும்.

இது வாதத் தன்மையை அதிகரிக்கவல்லது. எனவே வாத தேகம் உள்ளவர்கள் அல்லது வாத நோயால் அவதிப்படுபவர்கள் இக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.

அத்துடன், இந்தக் கிழங்கு மருந்துகளின் வீரியத்தை மட்டுப்படுத்தும் தன்மை உடையது. அதனால் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்களும் இதைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எப்போதாவது ருசிக்காகக் கொஞ்சம் சாப்பிடலாம்.

கருணைக் கிழங்கு

இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம்.
கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.

(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.

காரும் கருணையைப் பிடிகருணை என்றும்,

காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.
முதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.
சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.
சிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.
ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.
பெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது. 
காராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.
இதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
காரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.மூலிகை இலைகள்

வேப்பிலை : குடல் புழுக்களைக் கொல்லவும், சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
துளசி இலை : கடுமையான ஜலதோஷம், சுவாசம் விடுவதில் பிரச்னை இருந்தால், தீர்த்து வைக்கிறது.
வெற்றிலை : அப்படியே நசுக்கி, சாற்றை நேரடியாக புண்களின் மீது தடவினால் குணமாகி விடும்.
கடுகு இலை: இதனுடைய சாறு, தொற்றினால் ஏற்படும் காது சம்பந்தமான பிரச்னைகளுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுகிறது.
பாகல் இலை : தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு ஆகியவை குணமாகும்.
முருங்கை இலை : சமைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
மாவிலை : தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துத் தேநீர் மாதிரிக் குடித்து வந்தால், night blindness என்ற கண் பார்வைக் குறைகள் நீங்கும்.
பப்பாளி இலை: பசை போல் அரைத்துத் தீப்புண்களின் மீது தடவலாம்.
புளிய இலை: இதைச் சாப்பிட்டு வந்தால் பச்சை நரம்பு உள்ளவர்களுக்கு அது குணமாகும். மூல நோயையும் குணமாக்கும்.
புதினா இலை : சிறு பூச்சிகள் கடித்து விட்டால், காயத்தைக் கழுவ, புதினா இலையைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
முந்திரி இலை: தளிர் இலைகளை நன்றாகக் கடித்துத் தின்றால் பல் வலி போகும்.
கறிவேப்பிலை : முடி உதிர்வதைக் கட்டுப்படுத்தும்; நீரிழிவு நோயைக் குணப்படுத்தும். 
ஆமணக்கு இலை : தோலின் மீது ஏற்படும் புண்களையும் காயங்களையும் குணமாக்கும்.
யூகலிப்டஸ் இலை : எக்ஸீமா என்ற படை நோய்க்கும், சொறி சிரங்குக்கும் நல்ல குணம் தருகிறது

அத்தி லஸ்ஸி

அத்தி... Family : Moraceae
Popular English Name : Fig
Hindi : Gular
Telugu : Medi/Athi Manu
Malayalam : Athi
தேவை
சுத்தம் செய்த உலர் அத்திப் பழம்... ஒரு கப்
புளிப்பில்லாத கட்டித் தயிர்... ½ கப்
வெல்லக் கரைசல் ... 2 மேஜைக்கரண்டி
ஏலப்பொடி... ஒரு சிட்டிகை
செய்முறை
அத்தியை சுத்தம் செய்து உதிர்த்து வைத்து பத்து நிமிடம் சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். இத்துடன் தயிர், வெல்லக் கரைசல் மற்றும் ஏலப்பொடி, தேவையான நீர் சேர்த்து மிக்சியில் இட்டு அடித்து எடுக்கவும்.
பருகுவதற்குப் புதுமையான ருசி மிகுந்த பானம் ரெடி! வழக்கமாக குடிக்கும் குளிர்பானத்துக்குப் பதிலாக இதைப் பருகச் செய்து குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்தலாமே!
மருத்துவ குணங்கள்
உடலுக்கும் மூளைக்கும் குளுமை. பெண்களுக்கான `அந்த' மூன்று நாட்களில் மிகவும் ஆறுதலானது. கிட்னியின் செயல்பாட்டைச் சீராக்கும். வயிற்று உபாதைகள் வலி மற்றும் மூலத்துக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளது.
அழகுக் குறிப்பு
தயிர் போன்ற நல்ல இயற்கை ப்ளீச் வேறொன்றும் இல்லை. தயிருடன் சிறிது பச்சரிசி மாவைக் கலந்து பேஸ்ட் போல செய்து மாஸ்க் போட்டு, நன்கு காய்ந்த பிறகு எதிர்பக்கமாக விரல்களால் தேய்த்து விட்டால் முகத்தில் இருக்கும் உயிரற்ற செல்கள் உதிர்ந்து `பளிச்' முகம் உங்கள் சொந்தமாகும்.
புளித்த தயிரை கீழே கொட்ட வேண்டாம். தலையில் தேய்த்துக் குளித்தால் பட்டு போன்ற கேசம் கிடைக்கும்.

அஜீரணத்தால் அவதி

பூண்டு... (Family: Liliaceae)

ஆங்கிலப் பெயர்... Garlic

இந்தி... Lassum, மலையாளம்... Vellulli

தெலுங்கு.. Tella Gadda தாவரவியல் பெயர்... Allium sativum,, கார்லிக் மில்க்

தேவை

உரித்த பூண்டு பல்... 5, காய்ச்சிய பால்... 2 கப், தேன்... 1 தேக்கரண்டி, ஏலப்பொடி... ஒரு சிட்டிகை

செய்முறை

அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து அதில் பூண்டு பற்களை இடவும். குறைந்த தணலில் (சிம்) பாலை (முக்கால் திட்டமாக சுண்டும் வரை) காய்ச்சவும். பூண்டு கண்ணாடி போல மென்மையாகிவிடும். அழுத்தினால் அப்படியே மாவு போல நசிந்துவிடும்). இப்போது ஏலப் பொடி கலக்கவும். அதிக சூடு இல்லாமல், வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் தேனைக் கலந்து பருகவும்.

எப்போது குடிக்கலாம்?

பூண்டு நாற்றம் முழுக்க போய் விடும்.

தினமும் இரவில் பூண்டு பற்களைத் தின்று, பாலைக் குடிக்கவும்.

பள்ளி செல்லும் பருவத்தினர் முதல் எத்தனை வயது முதிர்ந்தவரும் பருகலாம்.

ஆச்சாரமாக இருப்போர் வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்ப்பர். ஆயினும் இதை மருத்துவ மூலிகை அளிக்கும் இயற்கை மருந்தாக எண்ணி பயனடையலாம்.

மருத்துவப் பயன்கள்

முக்கியமாக வாய்வுத் தொல்லை அகலும். ரத்த அழுத்தம், பி.பி. கொலஸ்ட்ரால் ஆகியவை குறையும். நோய் எதிர்ப்பு சக்தி மிகும். குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி தொல்லை, தொற்று ஆகியவைகளில் இருந்து காக்கலாம். எகிப்து நாட்டில் பிரமிட் கட்டியபோது, அந்த பணியாளர்களுக்கு கொள்ளை நோயில் இருந்து காக்க பூண்டை உணவுடன் அளித்த சரித்திர சான்று உள்ளது. தேவையற்ற கொழுப்பினால் சதைக் கோளமான உட
ல் சீராகி, கொடி போன்ற மெல்லிய உடல் வாகுக்கு பக்கத் துணையாய் இருப்பது இந்த பூண்டு.

மூலிகை சமையல்

தூக்கம் வராமல் திண்டாட்டமா?

அதோ, அதற்கும் இருக்கு தீர்வு!

தேன் - பாலும், சுவையான கசகசா அல்வாவும்! குண்டாகி கல்யாணமாகாமல் திண்டாடும் பூங்கொடிக்கும் உடலைக் குறைக்க உணவு வகைகள். ஒல்லிப் பிச்சானாக, தாழ்வு மனப்பான்மையுடன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத, கல்யாணராமனுக்கு கல்யாண பாக்யம் தரும் உடலை புஷ்டியாக்கும் உருண்டை வகைகளும் உள்ளன கைவசம். 

shortcut tea

கறிவேப்பிலை சட்னி


தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 1 கோப்பை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
புளி - 1 கொட்டை அளவு
தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை
1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும்.
4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும்.
6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும்.
7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும். இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

Loading...

Followers

J.ELANGOVAN.TRICHY