Saturday, 9 June 2012

மாங்காய் ஊறுகாய்


தேவையானவை

மாங்காய் - 2 பெரியது
உப்பு - 2 கப்
மிளகாய்த்தூள் - 1 1/2 கப்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து பொடிக்க வேண்டும்)
கடுகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிது
நல்லெண்ணெய் - 2 கப்
கறிவேப்பிலை

செய்முறை
       
      மாங்காயை கழுவி உலர்த்தி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • இதில் உப்பு கலந்து மூடி வைக்கவும். (கண்ணாடி பாத்திரத்தில் வைத்தால் சீக்கிரம் கெடாது)
  • ஒவ்வொரு நாளும் கை படாமல் கலக்கி விடவும்.
  • 5 அல்லது 6 நாள் சென்ற பிறகு மிளகாய்த்தூளை ஊறிய மாங்காயுடன் கலக்கவும்.
  • கடாயில் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், கடுகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் மாங்காயும் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
       2 வாரங்களுக்குப் பிறகு உபயோகிக்கலாம்.
       6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்

முருங்கை ரசம்

எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து துண்டு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். மணமும் ருசியும் ஊரைக்கூட்டும். ரசம் வெறுப்பவர்கள் கூட ரசித்து சாப்பிடுவார்கள்.

பூண்டு ஊறுகாய்

உரித்த பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,
உப்பு - 1/2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - கொஞ்சமாக
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன், 





செய்முறை


வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.

பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.


J.ELANGOVAN.TRICHY