Saturday 25 June 2016

கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது


கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம். மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.


அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.


ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 944655663 , 0422- 2302925 , 9655815116 , 0422-2456911 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
http://www.aatroram.com/?p=46890#prettyPhoto/2/
நன்றி samayal

Wednesday 1 June 2016

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.
J.ELANGOVAN.TRICHY