Wednesday, 19 September 2012

வெஜ் ரோல்ஸ்

தேவையானப் பொருட்கள்
  • மேல்மாவிற்கு:
  • மைதா மாவு - 1 1/2 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • ஈஸ்ட் - அரை தேக்கரண்டி
  • இளம் சூடான தண்ணீர் - கால் கப்
  • சீனி - ஒரு தேக்கரண்டி
  • பூரணத்திற்கு:
  • உருளைக்கிழங்கு - 2
  • தக்காளி - ஒன்று
  • கேரட் - ஒன்று
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • வெங்காயம் - பாதி
  • உள்ளி - 4 பற்கள்
  • கடுகு, பெரிய சீரகம், கறுவா(பட்டை), கிராம்பு, ஏலம் - சிறிது
  • மிளகாய் தூள் - ஒரு மேசைகரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்
  • கோஸ், லீக்ஸ் கலவை - ஒரு கப்
  • கறிவேப்பிலை - சிறிது
  • தண்ணீர் - 2 கப்
  • எண்ணெய் - அரை லிட்டர் பொரிப்பதற்கு
தக்காளி, உருளைக்கிழங்கினை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். காரட்டை மெல்லிய சிறு துண்டுகளாக வெட்டவும் அல்லது துருவி வைக்கவும். கோஸ், லீக்ஸ் இரண்டையும் மெலிதாக அரிந்து வைக்கவும். வெங்காயம், உள்ளியை பொடியாக வெட்டி வைக்கவும். கறுவா(பட்டை), கிராம்பு, ஏலத்தை வெறும் சட்டியில் வறுத்துபொடித்து வைக்கவும்.


இளம் சூடான தண்ணீரில் சீனியை கரைத்து அதில் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் மைதா மாவினை அரித்தெடுத்து(சலித்து) உப்புடன் கலந்து வைக்கவும். பின்னர் நொதித்த ஈஸ்ட் கலவையை மாவுடன் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும். தேவைப்படின் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் பிசைந்த மாவினை உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள்(மணிநேரங்கள்) வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, பெரிய சீரகம், வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றைப் போட்டு 5 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் அதனுள்வெட்டிய கோஸ், லீக்ஸ், கேரட்டை சேர்த்து கிளறி மூடி 5 நிமிடங்களுக்கு அவிய விடவும்.

பின்னர் வெட்டிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு கலந்து மூடி வேக விடவும். தண்ணீர் ஓரளவு வற்றியதும் பொடித்து வைத்த ஏல கலவையை சேர்த்து கிளறவும். தண்ணீர் நன்கு வற்றி கறி சுருண்டு வந்ததும் இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறவிடவும்.

பின்னர் குழைத்து வைத்த மாவினை எடுத்து திரும்பவும் நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்து கொள்ளவும்.

தேய்த்த மாவின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி கறியை நீளவாக்கில் வைக்கவும். பின்னர் இரு பக்க கரையிலும் உள்ள மாவினை கறியின் மேலே வருமாறு மூடவும். (இப்போது செவ்வக வடிவில் இருக்கும்)
பின்னர் மாவினை கறியுடன் சேர்த்து இழுத்து உருட்டவும். (இது உருளை வடிவில் இருக்கும்).

ஒரு பிரஷ்ஷால் சிறிது தண்ணீரை இதன் மேலே பூசி ரஸ்க் தூளில்(Bread crumps) போட்டு பிரட்டவும்.

பிரட் தூள் உருளை முழுவதும் ஒட்டும்படி நன்கு பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.

இதேபோல் அனைத்து மாவையும் சப்பாத்திகளாக தேய்த்து, உள்ளே மசாலா வைத்து, உருட்டி, ப்ரட் துகள்களில் தேய்த்து எடுத்து வைக்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 1/2 லீட்டர் எண்ணெயை விட்டு, அது நன்கு கொதித்ததும் அதனுள் இந்த ரோல்சினை ஒன்று அல்லது இரண்டாக போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான வெஜ்-ரோல்ஸ் தயார். இதனை தக்காளி சாஸ்/கெட்ச்-அப்புடன் பரிமாறலாம்.
குறிப்பு;
மாவினை பிசைந்து உருட்டி மூடி 2 மணித்தியாலங்கள் வைத்திருந்து எடுக்கும் போது அது நன்கு ஊதியிருக்கும் (ஈஸ்ட் சேர்த்திருப்பதால்) எனவே அதனை திரும்பவும் பிசைதல் அவசியம். கறியை தண்ணீர் வற்றும் வரை விடும் போது அடிப்பிடிக்காது கிளறிக் கொண்டே இருக்கவும்.

கேரட் குக்கீஸ்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 1 கப்
காரட் 5
பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 2 கப்
வெண்ணெய் 2 கப்

மைதா 2 கப்
முட்டை 1
வெனிலா 1 டேபிள் ஸ்பூன்

உலர்ந்த திராட்சை, முந்திரி 8

உப்பு, நெய் தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை நன்றாக அவித்து, மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாக கடைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கேரட் மசியலை சேர்க்கவும்.

மைதா, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை கேரட் கலவையுடன் கலந்து நன்றாக கடைய வேண்டும். தேவையானால் சிறிது எஸ்சென்ஸ் சேர்த்து கொள்ளலாம்.

பின்னர் இந்த கலவையை சிறிய டப்பாக்களிலோ அல்லது பெரிய தட்டிலோ நெய் தடவி, சிறிது இடைவெளி விட்டு ஊற்ற வேண்டும். அதன் மேற்பரப்பில் முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் போன்றவற்றை தூவலாம்.

இதனை 10 முதல் 15 நிமிடம் வரை ஓவனில் வைத்து பேக் பண்ணவும். பின் வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் பரிமாறலாம்.

ஆலு பரோட்டா


தேவையான பொருட்கள்

  • மாவை குழைக்க:
  • மைதா - ஒரு கப்
  • பட்டர் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - கால் தேக்கரண்டி
  • பால் - இரண்டு மேசக்கரண்டி
  • பில்லிங் செய்ய
  • பொடேடோ - ஒன்று (வேகவைத்து மசித்தது)
  • கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
  • சீரக தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகு தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - ஒரு பின்ச்
  • கொத்து மல்லி தழை - 2 மேசை கரண்டி ( பொடியாக நருக்கியது)
  • எண்ணை+ பட்டர் (அ) நெய் கலவை - பொரிக்க தேவையன அளவு

செய்முறை

  • மாவை குழைத்து கொள்ளுங்கள்.
  • பொடேடோவில் கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல் மசித்து கொல்ளுங்கள்.
  • சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அ) சதுர வடிவில் மாவைதேய்த்து அதி இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வைவாக மூடி இருபக்கமும் மாவை தடவி முஈண்டும் மெதுவாக தேய்க்கவும்.
  • தேய்த்து தவ்வாவில் எண்ணை பட்டர் (அ) நெய் கலவையை கொஞ்சமா ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.

வெள்ளை பணியாரம்


தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 500 கிராம்,
  • குண்டு உளுத்தம் பருப்பு - 125 கிராம் (4க்கு 1),
  • பால் - 1 கரண்டி,
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி,
  • உப்பு - 2 தேக்கரண்டி,
  • ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி.

செய்முறை

  • அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன், பால், சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் வைக்கவும். (மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்).
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு சின்ன கரண்டியால் மொண்டு ஊற்றவும்.
  • அரி கரண்டியால் எண்ணெயை பணியாரத்தின் மேலே அள்ளி ஊற்ற, உப்பி வரும்.
  • வெள்ளையாக இருக்கும் போதே, திருப்பி விட வேண்டும்.
  • மறுபுறமும் சிவக்காமல் வெள்ளையாக இருக்கும் போதே எண்ணெயை வடித்து எடுக்கவும்.
  • அப்படியே எல்லா மாவையும் ஊற்றி எடுக்கவும்.

குறிப்பு:

1) முக்கியமான விஷயம், மாவு தோசைப்பதத்திற்கு மேல் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. 2) சிவக்க விட கூடாது. 3) 3 அங்குல விட்டத்தில் இருந்தால் போதுமானது. 4) மாவை ஒரே முறையாக ஊற்ற வேண்டும், நிறுத்தி நிறுத்தி ஊற்றக்கூடாது. 5) ஒரு முறைக்கு ஒன்று தான் ஊற்ற வேண்டும். 6) சுட சுட சூடாக வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்: 

வறுத்த கடலைப் பருப்பு - 1 கப்.

பயத்தம் பருப்பு - 1 கப்.

அரிசி - 1 கப்.

சர்க்கரை - 2 கப்.

தேங்காய் துறுவல் - கால் கப்.

நெய், ஏலம் - தேவைக்கேற்றப்படி.

செய்முறை:

பொடித்த பருப்பு, அரிசி ஆகியவற்றில் சர்க்கரையை பாகாக செய்து ஊற்றவும்.பின்னர் தேவையான அளவுக்கு தேங்காய் துறுவல், ஏலம் ஆகியவற்றை கலக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கவும். சூப்பரான இனிப்பு பருப்புஉருண்டை தயார்!

சில்லி சிக்கன் பிரை

கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை: 

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.
J.ELANGOVAN.TRICHY