Wednesday, 19 September 2012

வெள்ளை பணியாரம்


தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 500 கிராம்,
  • குண்டு உளுத்தம் பருப்பு - 125 கிராம் (4க்கு 1),
  • பால் - 1 கரண்டி,
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி,
  • உப்பு - 2 தேக்கரண்டி,
  • ஆப்ப சோடா - 1/4 தேக்கரண்டி.

செய்முறை

  • அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 2 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.
  • அரைத்த மாவுடன், பால், சர்க்கரை, உப்பு, ஆப்ப சோடா சேர்த்து கலக்கி 1/2 மணி நேரம் வைக்கவும். (மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்).
  • வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஒரு சின்ன கரண்டியால் மொண்டு ஊற்றவும்.
  • அரி கரண்டியால் எண்ணெயை பணியாரத்தின் மேலே அள்ளி ஊற்ற, உப்பி வரும்.
  • வெள்ளையாக இருக்கும் போதே, திருப்பி விட வேண்டும்.
  • மறுபுறமும் சிவக்காமல் வெள்ளையாக இருக்கும் போதே எண்ணெயை வடித்து எடுக்கவும்.
  • அப்படியே எல்லா மாவையும் ஊற்றி எடுக்கவும்.

குறிப்பு:

1) முக்கியமான விஷயம், மாவு தோசைப்பதத்திற்கு மேல் கெட்டியாகவோ, தண்ணீராகவோ இருக்க கூடாது. 2) சிவக்க விட கூடாது. 3) 3 அங்குல விட்டத்தில் இருந்தால் போதுமானது. 4) மாவை ஒரே முறையாக ஊற்ற வேண்டும், நிறுத்தி நிறுத்தி ஊற்றக்கூடாது. 5) ஒரு முறைக்கு ஒன்று தான் ஊற்ற வேண்டும். 6) சுட சுட சூடாக வெங்காய சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

J.ELANGOVAN.TRICHY