Thursday 19 April 2012

உப்புமா தயார்.

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்
செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.
5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.
 ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும்.ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். 

சாம்பார் ரெடி


தேவையான பொருட்கள் :துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)தக்காளி - 3வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியதுபுளி - எலுமிச்சம்பழம் அளவுசக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன்கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :1. முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும்.2. பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.3. பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.5. இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.6. பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.அவ்வளவுதான் சாம்பார் தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எதற்கு வேண்டுமானாலும் ஊற்றிச் சாப்பிடுங்க. சாம்பாரில் மேலும் முருங்கைக்காய், காரட் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து அவித்துக் கொள்ளவும். கத்தரிக்காய் சேர்க்க விரும்பினால் துண்டுகளாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

கத்தரிக்காய் புளிக்குழம்பு

கத்தரிக்காய் புளிக்குழம்பு


தேவையானவை :
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 3 நடுத்தர அளவு
வெங்காயம் - பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3/4
கத்தரிக்காய் - 2/3
தேங்காய் - 3 பத்தை
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்

3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். புளிச்சக்கையை கீழே போட்டுடணும் பாஸு. குழம்பிலே போட்டுடாதீங்க ;)

7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு :
இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.

குழம்பு மசாலாவுக்கு கடையில் கிடைக்கும் சக்தி அல்லது ஆச்சி குழம்பு மசாலா பயன்படுத்தலாம். வேலை எளிது.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்


இன்னிக்கு ஒரு சுவையான பொரியல்/சைட்டிஷ் ஆன உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை :
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 7,8
சக்தி குழம்பு மசாலாப் பொடி - 1 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையை முதலில் போடவும்.

3. பின் வெட்டிய உருளைக்கிழங்கு, வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். முதலில் தீயை அதிகமாக வைத்துக் கொண்டால் எளிதில் வதங்கும். கொஞ்சம் வெந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளலாம்

4. நன்றாக வதங்கியதும் அதில் குழம்பு மசாலாப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

5. மசாலாப் பொடி உருளைக்குழங்கில் நன்றாகப் பிடித்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.

சுடச்சுட சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

பரங்கிக்காய் பாயசம்

பரங்கிக்காய் பாயசம்

  • பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
  • பால் - 500 மிலி
  • வெல்லம் - 1 1/2 கப் (துருவியது)
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • முந்திரி, திராட்சை, சாரை பருப்பு, நெய் - தேவையான அளவு
  • வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

  •  செய்முறை 

  • தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  • ஒரு மைக்ரோவேவ் சேஃப் பாத்திரத்தில் துருவிய பரங்கிக்காய் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு 5- 6 நிமிடங்கள் வைத்து வேக விடவும். நடுநடுவே கிளறி விடவும்.
  • ஒரு கடாயில், நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, சாரை பருப்பு போட்டு வறுத்து கொள்ளவும்.
  • பால் காய்ந்ததும், வேக வைத்த பரங்கிக்காயை சேர்க்கவும். பாலுடன் கலந்து நன்கு கொதிக்க விடவும். பின்னர், துருவிய வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாயசத்துடன் நன்கு கலக்க வேண்டும். இதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  • இப்போது நெய்யில் வறுத்து வைத்துள்ள பருப்புகள் மற்றும் திராட்சையை சேர்க்கவும். கடைசியில் வெனிலா எசன்ஸ் சில துளிகள் சேர்க்கவும். இல்லையெனில் ஏலக்காய் சேர்க்கலாம்.
  • சுவையான பரங்கிக்காய் பாயசம் தயார்.
  • பரங்கிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது. பொரியல், குழம்பை விட பாயசம் செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பரங்கிக்காய் பிடிக்காதவர்களுக்கும் இந்த பாயசம் பிடிக்கும். பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பரங்கிக்காய் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் ரொம்ப நல்லது.


கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு

  • கறிவேப்பிலை – அரை கப்
  • சின்ன வெங்காயம் - 20
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • சிகப்புமிளகாய் - 4
  • பூண்டு - 2 பல்
  • இஞ்சி – சிறுத்துண்டு
  • கட்டிப்பெருங்காயம் - சிறுத்துண்டு
  • வெங்காய கறி வடகம் – ஒரு துண்டு
  • கடுகு - தாளிக்க
  • நல்லெண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  • புளி - எலுமிச்சையளவு
  • உப்பு – தேவைக்கு
  • செய்முறை 
  • சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும். அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம், வெங்காய கறி வடகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும். வதக்கிய பின்னர் ஊற வைத்த புளி தண்ணீர் மற்றும் மிக்ஸியில் அரைப்பு கழுவிய தண்ணீர்(2 கப்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். இந்த குழம்பு சாதம், இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு குருமா


  • உருளைக்கிழங்கு குருமா


  • உருளைக்கிழங்கு - 3
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • பூண்டு - 5 பல்
  • தக்காளி - ஒன்று
  • மஞ்சள்தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கு
  • அரைக்க :
  • தேங்காய் - ஒரு கப்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • கசகசா - கால் தேக்கரண்டி
  • பச்சைமிளகாய் - 6
  • சின்னவெங்காயம் - 6
  • பூண்டு - 6 பல்
  • மல்லிதழை - கொஞ்சம்
  • மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - சிறு துண்டு
  • தாளிக்க :
  • பட்டை - 3 துண்டு
  • கிராம்பு - 3
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • எண்ணெய் - தேவைக்கு

  •  செய்முறை 

  • பூண்டு, வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சிறு துண்டாகவும், உருளையை தோல் சீவி சிறு துண்டாகவும் நறுக்கி வைக்கவும். வாணலியில் அரைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வதக்கி அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள்தூள், உப்பு, 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாற குருமா ரெடி. இந்த குருமா தக்காளிசாதம், சப்பாத்தி, பூரிக்கு பொருத்தமாக இருக்கும்.

தக்காளிசாதம் ரெடி

தக்காளிசாதம் ரெடி 



tea special


டீ தயாரித்தல்

 டீ தயாரித்தல் 



தாளிச்சா ரெடி


தாளிச்சா ரெடி 



பிரியாணி ரெடி

Easy Biriyani



J.ELANGOVAN.TRICHY