Wednesday 10 October 2012

சில்லி சிக்கன் பிரை


சில்லி சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்:

கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

மொறு மொறு வாளை மீன் வறுவல்.


தேவையான பொருட்கள்

  • வாளை மீன் - அரை கிலோ
  • எண்ணை - 100 மில்லி
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
  • பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
  • கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
  • கடலை மாவு - 1டீஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
  • உப்பு - தேவைக்கு.
  • ரெட் கலர் - 1 பின்ச்

செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
  • பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
  • ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

மீன் தொக்கு


தேவையான பொருட்கள்

  • 1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்)
  • 2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • 3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • 4. மிளகாய் வற்றல் - 2
  • 5. பச்சை மிளகாய் - 2
  • 6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  • 7. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • 8. மிளகு தூள் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • 9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 10. தனியா தூள் - 3 தேக்கரண்டி
  • 11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  • 13. கருவேப்பிலை, கொத்தமல்லி
  • 14. உப்பு

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து உடைய வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
  • தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.
  • நன்றாக மீன் வெந்து, நல்லா மசாலா கெட்டி ஆனதும் இறக்கிவிடவும்.

அடை (அ) கார தோசை


அடை (அ) கார தோசை

தேவையான பொருட்கள்

* அரைக்க:

* 1. இட்லி அரிசி - 4 கப்
* 2. துவரம் பருப்பு - 1 கப்
* 3. மிளகாய் வற்றல் - 10
* 4. பூண்டு - 5 பல்
* 5. உப்பு
* தாளிக்க:
* 1. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 2. உளுந்து + கடலை பருப்பு - 1 பெரிய குழிக்கரண்டி
* 3. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* 4. கொத்தமல்லி, கருவேப்பிலை


செய்முறை

* அரிசி, பருப்பை இரவே ஊர வைக்கவும்.
* மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்துஅரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம்,கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
* இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும்.


குறிப்பு:
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். காரம் அதிகமாக சேர்த்தால்எதுவும் இல்லாமல் வெறும் அடை தோசை சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்கவிரும்பாதோர் பூண்டு இல்லாமலும் செய்யலாம். மாவு புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே தோசைசெய்யலாம்.
J.ELANGOVAN.TRICHY