Friday, 20 April 2012

அத்தி லஸ்ஸி

அத்தி... Family : Moraceae
Popular English Name : Fig
Hindi : Gular
Telugu : Medi/Athi Manu
Malayalam : Athi
தேவை
சுத்தம் செய்த உலர் அத்திப் பழம்... ஒரு கப்
புளிப்பில்லாத கட்டித் தயிர்... ½ கப்
வெல்லக் கரைசல் ... 2 மேஜைக்கரண்டி
ஏலப்பொடி... ஒரு சிட்டிகை
செய்முறை
அத்தியை சுத்தம் செய்து உதிர்த்து வைத்து பத்து நிமிடம் சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ளவும். இத்துடன் தயிர், வெல்லக் கரைசல் மற்றும் ஏலப்பொடி, தேவையான நீர் சேர்த்து மிக்சியில் இட்டு அடித்து எடுக்கவும்.
பருகுவதற்குப் புதுமையான ருசி மிகுந்த பானம் ரெடி! வழக்கமாக குடிக்கும் குளிர்பானத்துக்குப் பதிலாக இதைப் பருகச் செய்து குழந்தைகளுக்கும் அறிமுகப் படுத்தலாமே!
மருத்துவ குணங்கள்
உடலுக்கும் மூளைக்கும் குளுமை. பெண்களுக்கான `அந்த' மூன்று நாட்களில் மிகவும் ஆறுதலானது. கிட்னியின் செயல்பாட்டைச் சீராக்கும். வயிற்று உபாதைகள் வலி மற்றும் மூலத்துக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளது.
அழகுக் குறிப்பு
தயிர் போன்ற நல்ல இயற்கை ப்ளீச் வேறொன்றும் இல்லை. தயிருடன் சிறிது பச்சரிசி மாவைக் கலந்து பேஸ்ட் போல செய்து மாஸ்க் போட்டு, நன்கு காய்ந்த பிறகு எதிர்பக்கமாக விரல்களால் தேய்த்து விட்டால் முகத்தில் இருக்கும் உயிரற்ற செல்கள் உதிர்ந்து `பளிச்' முகம் உங்கள் சொந்தமாகும்.
புளித்த தயிரை கீழே கொட்ட வேண்டாம். தலையில் தேய்த்துக் குளித்தால் பட்டு போன்ற கேசம் கிடைக்கும்.

No comments:

J.ELANGOVAN.TRICHY