Friday, 19 October 2012

ஏலக்காய்


ஏலக்காய்


சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது. பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள். குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு. மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுமென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும். நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

மருத்துவ குணங்கள்

  • ஏலக்காய் ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.
  • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.
  • ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.
  •  இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.
  • ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.
  • மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Wednesday, 10 October 2012

சில்லி சிக்கன் பிரை


சில்லி சிக்கன் பிரை

தேவையான பொருட்கள்:

கோழி 1 கி
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கரம் மசாலா
டால்டா அல்லது நெய்
வினிகர்
எலுமிச்சை சாறு
வெள்ளரிக்காய்

செய்முறை:

முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும். வேகவைத்த கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் கறியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து, எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

மொறு மொறு வாளை மீன் வறுவல்.


தேவையான பொருட்கள்

  • வாளை மீன் - அரை கிலோ
  • எண்ணை - 100 மில்லி
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
  • பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
  • கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
  • கடலை மாவு - 1டீஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
  • உப்பு - தேவைக்கு.
  • ரெட் கலர் - 1 பின்ச்

செய்முறை

  • மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
  • பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
  • ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

மீன் தொக்கு


தேவையான பொருட்கள்

  • 1. மீன் - 1/2 கிலோ (ஃபில்லெட்ஸ் துண்டுகள்)
  • 2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • 3. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • 4. மிளகாய் வற்றல் - 2
  • 5. பச்சை மிளகாய் - 2
  • 6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  • 7. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • 8. மிளகு தூள் - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
  • 9. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 10. தனியா தூள் - 3 தேக்கரண்டி
  • 11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  • 13. கருவேப்பிலை, கொத்தமல்லி
  • 14. உப்பு

செய்முறை

  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து உடைய வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டவும்.
  • தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளி கரைசல் சேர்க்கவும்.
  • நன்றாக மீன் வெந்து, நல்லா மசாலா கெட்டி ஆனதும் இறக்கிவிடவும்.

அடை (அ) கார தோசை


அடை (அ) கார தோசை

தேவையான பொருட்கள்

* அரைக்க:

* 1. இட்லி அரிசி - 4 கப்
* 2. துவரம் பருப்பு - 1 கப்
* 3. மிளகாய் வற்றல் - 10
* 4. பூண்டு - 5 பல்
* 5. உப்பு
* தாளிக்க:
* 1. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
* 2. உளுந்து + கடலை பருப்பு - 1 பெரிய குழிக்கரண்டி
* 3. வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* 4. கொத்தமல்லி, கருவேப்பிலை


செய்முறை

* அரிசி, பருப்பை இரவே ஊர வைக்கவும்.
* மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் நன்றாக தோசை மாவு பதத்தில் தண்ணீர் சேர்த்துஅரைத்துக்கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்து, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், வெங்காயம்,கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மாவில் கொட்டி கலக்கவும்.
* இதை வழக்கம்போல் தோசை வார்க்கவும்.


குறிப்பு:
இதற்கு தேங்காய் சட்னி, வெங்காய தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும். காரம் அதிகமாக சேர்த்தால்எதுவும் இல்லாமல் வெறும் அடை தோசை சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்கவிரும்பாதோர் பூண்டு இல்லாமலும் செய்யலாம். மாவு புளிக்க தேவையில்லை. அரைத்த உடனே தோசைசெய்யலாம்.

Monday, 1 October 2012

வெங்காய பலன்கள்


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன்வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர் த்தம்.
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரி த்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர் த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் ம றையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட் டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடு த்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற் கண்டு தூளையும் எடுத்து, அனை த்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறு களும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலை வலி களைக் குறைக்கும். வெங்காயத் தை வதக்கிச் சாப்பிட உஷணத் தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்டகட்டிகள் உடனே பழுத்து உடை யும்.
7. வெங்காயச் சாறு சில வயிற் றுக் கோளாறுகளை நீக்கும். இ தை மோரில் விட்டுக் குடிக்க இரு மல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப் பளித்து, வெறும் வெங்காயச் சா றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறை யும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சம நிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தே ன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உட ல் பல மாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறு ம் வயிற்றில் சாப்பிட்டுவர நரம் புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெ ருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகர வை த்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தே னையும் கலந்து அல்லது வெங்கா யச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடி த்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடு த்து அரைத்து சாப்பிட மேக நோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. என வே குண்டா னவர்கள் தாராள மாக வெங்காயத்தைப் பயன் படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறு குடல் பாதையை சுத்தப்படுத்துகிற து. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட் கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்று வே ளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்த மாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரண மாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முக ப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரி யாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற் படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறை ய வெங்காயத்தைத் தின்னவேண் டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடி த்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க் கரை சேர்த்துக்குடிக்க மூலநோ ய் குண மாகும்.
34. காலரா பரவியுள்ள இடத் தில் பச்சை வெங்காயத்தைமெ ன்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற் றை சேர்த்து அரைத்து, ஒரு வெ ற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத் துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர் கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட் டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறை யும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பல மாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொ ண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்கா யம் சாப்பிட்டுவர பெண்களு க்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங் கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண் ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற் றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப் பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளி ர்ச்சியும், மூளை பலமும் உண்டா கும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத் தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
J.ELANGOVAN.TRICHY