Thursday 10 September 2015

வெந்தயக்கீரை மீன் குழம்பு !





வெந்தயக்கீரை மீன் குழம்பு !

தேவையான பொருட்கள்:

வஞ்சிரமீன் - 1/2 கிலோ

வெங்காயம் 200 கிராம்

தக்காளி - 350 கிராம்

தக்காளி பேஸ்ட் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன்

தனியாத்தூள் 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - ருசிக்கு தேவையான அளவு

வெந்தயம் - 1 டீ ஸ்பூன்

வெந்தயக்கீரை சிறிய கட்டு - 1

புளி ஒன்னறை சிறிய லெமன் சைஸ்

தாளிக்க:

நல்லெண்ணை - 3 டேபிள் ஸ்பூன்

கடுகு, சீரகம், சோம்பு, மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 6 பெரிய பல்

கருவேப்பிலை - ஒரு கைப்பிடி

தேங்காய் பவுடர் (அ) தேங்காய் பத்தை - 4 ஸ்பூன் (அ) 4 பத்தை

கொத்துமல்லி தழை - அரை கைப்பிடி

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக போடவும்.

வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்­ணீரை வடிக்கவும்.

தக்காளியை மையாக அரைத்து வைக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பூண்டை தட்டி போட்டு வதக்கி, கருவேப்பிலை சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் எல்லா மசாலா தூள் வகைகள், ஊறிய வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு 2 நிமிடம் வதக்கவும்.

அரைத்த தக்காளியை சேர்த்து அரை டம்ளர் தண்­ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு புளியை ஒரு டம்ளர் தண்ணீ­ரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்.

5 நிமிடம் கொதிக்கவிடவும்.

கடைசியாக மீனையும் தேங்காயையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.

சுவையான மணமான மருத்துவ குணம் நிறைந்த மேத்தி மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: வெந்தயமும், நல்லெண்ணையும் சேருவதால் வயிற்றுக்கு எந்த உபாதையும் அளிக்காது. உடல் சூட்டை தணிக்கும் குழம்பு. ப்ளெயின் ரைஸ், ரொட்டி, தோசை, ஆப்பம், குஸ்கா, அனைத்துக்கும் பொருந்தும்

No comments:

J.ELANGOVAN.TRICHY