முடக்கத்தான் கீரை தோசை
CLICK ME....>>>....Tamilaal Inaivom க்கு நன்றி
முடக்கத்தான் கீரை தோசை
. மருத்துவக் குணமும் சுவையும் நிறைந்த இந்தத் தோசையை வாரம் ஒரு முறை-யாவது சமையலில் சேர்த்துக்-கொண்டால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நல்லது.
முடக்கத்தான் தோசை செய்முறை:
தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப்.
முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஊற வைத்து தோசைமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைத்து வைக்கவும். நன்றாகக் கழுவி, சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் கூழாக அரைக்கவும். அதை ஏற்கெனவே அரைத்து வைத்த மாவில் கலக்-கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைக்-கவும். மறுநாள் தோசையாக ஊற்றி எடுக்க வேண்டும். கீரை கூடுதலாகச் சேர்த்தால் மிகவும் நல்லது.
இதற்கு தொட்டு சாப்பிட கொத்தமல்லிச் சட்னி நன்றாக இருக்கும்.
கொத்தமல்லிச் சட்னி செய்முறை:
மிளகாய் 8, ஒரு கைப்பிடி கொத்தமல்லி, உரித்த பூண்டு நான்கைந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்த பின், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சூடான தோசையில் இந்தச் சட்னியை வைத்து அதன் மீது நல்லெண்ணெ ஊற்றிச் சாப்பிட்டால் சுவை சொக்கவைக்கும்; சத்துக்களும் உடலில் சேரும்.
- நாகலக்ஷ்மி லோகநாதன், வேளச்சேரி
சித்த மருத்துவர் ஆர்.கண்ணன்:
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு 'முடக்கு + அற்றான்' என்று பெயர். இது மருத்துவக் குணங்கள் நிறைந்த, ஓர் அரியவகைக் கீரை. தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நெருங்காது. முதியோர்கள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி குறையும்.
-ஆரோக்கியமான வாழ்வு
Visit our Page -► தமிழால் இணைவோம்
No comments:
Post a Comment