தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.
* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.
* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.
* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.
* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
=======
மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment