Tuesday 24 April 2012

பப்பாளி



பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பப்பாளி பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து 16 ஆம் நுற்றண்டில் டச்சு வணிகர்களால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


பின்பு இந்தியாவில் இருந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பரவியது .நமக்குத் தெரியாமலேயே நம்முடைய வீட்டுக்கொல்லையில் முளைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும்  அற்ப்புத மரம் இது.

பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் “என்ஸைம்” எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை.


பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவிதமான  சருமம்கொண்டவரும் முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் ‘ஏ’, ‘சி’ சத்துகள் நிறைந்துள்ளன. குறைந்த கலோரியில் நிறைந்த சத்துகளைக் கொடுக்கக்கூடிய எளிய மிகவும் மலிவான பப்பாளி எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் இனிய பழம் ஆகும்.
பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்னும் நொதிப் பொருள் ஜுரண சக்திக்கு ஏற்றது.  “ஆல்ஃபா ஹைடிராக்ஸி ஆஸிட்” எனப்படும் பழ ஆசிட் பப்பாளியில் இருப்பதால் இது சருமத்தை மிருதுவாக்கும். சருமத்தில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
அஸ்கார்பிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, தயாமின், ரிபோபிளேவின் மற்றும் நயாசின் சத்துகள் அடங்கியுள்ளன. சோடியம் பொட்டாசியம் சத்துகளும், குறைந்த சர்க்கரை அளவும் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
அழகு சாதனப் பொருள்கள்  தயாரிப்பிற்கும், தலை  சுத்தம் செய்யும் திரவம் செய்யவும் உபயோகப்படுத்தப்படுகிறது.


பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது. உடல் பருமனைக் குறைக்கவும் தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது பப்பாளிக்காய்.


பப்பாளிப் பழத்திற்கு உடல்வலிமை, ஆண்மை தரும் சக்தி உண்டு. சொறி, சிரங்கு, காயம் ஆகியவற்றைப் போக்கிவிடும். கண்பார்வை கூர்மையடையவும், நீரடைப்பு குணமாகவும், இரத்தம் ஊறவும், பல் சம்பந்தமான கோளாறுகள் நீக்கவும் இது பயன்படுகிறது.
பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.


சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.


பெண்கள் சிவப்பழகை பெற செய்ய வேண்டியது மிக சுலமமான சிகிச்சை .அழகு
கலை நிலையங்கள் கோபம் கொள்ளக்கூடாது .


கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்
இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

பப்பாளிக் காயால் உடலில் ஏற்படும் வாதவலி நீங்கும். இதை பாலூட்டும் தாய்மார்கள் சமைத்து உண்டுவர தாய்ப்பால் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் தீரும். மேலும் வயிற்றிலுள்ள கிருமிகள் அழியும். பப்பாளிக்காயின் பாலை தேள்கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும். இந்த பாலை நமைச்சல் உண்டாக்கும் படைகளுக்கு தடவிவர நமைச்சல் அடங்கி விரைவில் மறைந்து விடும்.

வாரம் இருமுறை பப்பாளிக் காயை சமைத்து உண்டு வர உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது. இதை அதிகமாக வேக வைத்தால் வைட்டமின் ‘இ’ சத்து குறைந்து விடும்.
வைட்டமின் ‘ஏ’ என்ற உயிரிச்சத்து நிறைந்தது. உடலில் அதிக இரத்தத்தை உண்டு பண்ணும். மனித உடல் வளர்ச்சியடையவும், உடல் பலம் பெறவும், இரத்தத்தை விருத்தி செய்யும் நரம்புகளுக்கு உறுதியைக் கொடுக்கவும், கண்பார்வையைக் கூர்மைப்படுத்தவும், பற்களைப் கெட்டிப்படுத்தி ஈறுகளுக்கு பலத்தைக் கொடுக்கவும், பல் சம்பந்தமான நோய் வராமல் தடுக்கவும், அறிவை வளரச் செய்யவும், நல்ல ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் கூடிய அபார சக்தி வைட்டமின் ‘ஏ’ உயிரிச்சத்துக்குத்தான் உண்டு.


35 கிராம் இறைச்சியைச் செரிப்பதற்கு ஒரு கிராம் பப்பாயின் போதும் என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள். அதனாலதான் மாமிச உணவுத் தயாரிப்புக்களை மென்மைப்படுத்த பப்பாயின் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பப்பாயின் நொதிமம் பழுக்காத பப்பாளிக் காயில் நிறைய இருக்குது. பப்பாளி இலை, தண்டு போன்றவற்றில் கொஞ்சம் இருக்குது. குடல் புண், அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பப்பாளிக்காய் சாப்பிடலாம். மேலும் உணவுச் சத்துக்களை உறிஞ்சக் கூடிய ஒரு வகையான ஒட்டுயிரிகள் நமது குடலில் சிலசமயம் வளர்கின்றன. அவற்றை இந்தப் பப்பாயின் நொதிமம் கட்டுப்படுத்துகின்றது.
பப்பாளிப் பழம் உடம்புக்கு சூட்டை தரும் என்பார்கள். அதனால கருவுற்ற பெண்கள் இதைத் தின்றால் கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும் என்று சொல்வார்கள். இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும் சாதாரண காலத்தில் இதைத் சாப்பிடலாமே . புற்றுநோய் செல்களில் பைஃய்ரின் என்ற ஒரு நார்ப் பொருள் இருக்கின்றது. இது தான் புற்று நோயை நமது உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரப்புகின்றது. இந்த பைஃப்ரினை கட்டுப்படுத்தும் ஆற்றல் பப்பாயினுக்கு உண்டு. அதனால புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை எடுப்பவர்கள், பப்பாயினை சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் குணமடையலாம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.


பப்பாளி மரத்தின் தண்டில் இருந்து எடுக்கப்படும் பாலினால் காயம் கட்டி, பரு போன்ற புண்களைக் குணப்படுத்தலாம். காயத்தின் மீது பப்பாளி துண்டுகளை வைத்து அகலமான பப்பாளி இலைகளால் கட்டுப் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பப்பாளி மரத்தின் பட்டை இருக்கே அது பல்வலியைப் போக்கும். அதனாலதான் சூயிங்கம் தயாரிப்பில் பப்பாளிப் பால் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது.


பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள “பப்பாயின்” என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.
இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.


பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
தாமரை போன்ற பாதம் இல்லை என ஏங்குபவரா  நீங்கள்  ?மென்மையான பாதங்களுக்கு எளியவழி இதோ 
பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.



No comments:

J.ELANGOVAN.TRICHY